இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு குடிமகன்களுக்கு கதை திண்டாட்டம் தான்….

சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு இன்று வருகை தரும் நிலையில் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மற்றும் சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடு, அத்துடன் மாமல்லபுரம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மீனவர்கள் மீன்பிடிக்க தடை, சுற்றுலா பயணிகள் தடை என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் அரசு மதுபானக் கடைகள் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.