செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்களின் இன்றைய நிகழ்வுகள்

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் 25லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்கள் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து வேளாண் கடன், மகளீர் சிறு வணிக கடன், மத்திய கால கடன் என 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன்களை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு நிகழ்ச்சி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

மேலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 60 நபர்களுக்கு ரூ.53 லட்சம் மதிப்பில் விவசாய கடன், 44 நபர்களுக்கு (3குழு) ரூ.2.60 லட்சம் மதிப்பில் கோவைட் 19 சிறப்பு மகளிர் சுய உதவிக்குழு கடன், 265 நபர்களுக்கு (20 குழு) ரூ.1.06 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு கடன், 130 நபர்களுக்கு ரூ.56.15 லட்சம் மதிப்பில் சிறு வணிக கடன், ஒரு நபருக்கு ரூ.50,000/- மதிப்பிலான மாற்றுத்திறனாளி கடன், 4 நபர்களுக்கு ரூ.1.90 லட்சம் மதிப்பிலான கறவை மாடு வாங்குவதற்கான கடன், 16 நபர்களுக்கு ரூ.7.65 லட்சம் மதிப்பிலான மகளிர் தொழில் முனைவோர் கடன், 8 நபர்களுக்கு ரூ.43.50 லட்சம் மதிப்பிலான வீட்டு அடமான கடன், 14 நபர்களுக்கு ரூ.35.70 லட்சம் மதிப்பிலான சம்பளக் கடன், 2 நபர்களுக்கு ரூ.75,000/- மதிப்பிலான வீட்டு நுகர்வோர் கடன், 2 நபர்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான பணிபுரியும் மகளிர் கடன், 20 நபர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மகளிர் சிறுவணிக கடன், 2 நபர்களுக்கு ரூ.6.50 லட்சம் மதிப்பிலான மத்திய கால கடன் என மொத்தம் 568 பயனாளிகளுக்கு ரூ.3.25 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திகுளம்), மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு வங்கிகளின்; இணை பதிவாளர் கே.சி.ரவிசந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை பதிவாளாகள்; சுப்புராஜ், அருள்ஜோசி, ஏரல் வட்டாட்சியர் அற்புதமணி, சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அறவாழி, துணைத்தலைவர் பண்டாரம், கூட்டுறவு சங்க மேலாளர் சகுந்தலாதேவி, முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார், காசிராஜன், திருப்பாற்கடல், சொர்ணபாண்டியன், அலங்காரம் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.