கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 3 ஆயிரம் பேருக்கு சானிட்டைஸர் வழங்கல் : நியூஸ் 7, விவி டைட்டானியம்

நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மற்றும் தூத்துக்குடி விவி.டைட்டானியம் பிக்மென்ட்ஸ் சார்பில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், பணியாளர்கள் 3 ஆயிரம் பேருக்கு சானிட்டைஸர் மற்றும் ஹேண்ட் வாஷ் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரியிடம் வழங்கப்பட்டது.

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினர், மருந்துவ துறையினர், மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி, அன்பு பாலம் மற்றும் தூத்துக்குடி விவி டைட்டானியம் பிக்மென்ட்ஸ் சார்பில் 1000 சானிட்டைஸர், 2000 ஹேண்ட் வாஷ் ஆகியவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் விவி டைட்டானியம் பொதுமேலாளர் பார்த்திபன்,  மனிதவளமேம்பாட்டு துறை மேலளார் ஜீவானந்தம், மக்கள் தொடர்பு மேலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் கலந்து கொண்டுனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட செய்தியாளர்களுக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி சேனிட்டைஸர் மற்றும் ஹேண்ட்வாஷ் ஆகியவற்றை வழங்கினார்.