நியூ விங்ஸ் திட்டம் – மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்

நியூ விங்ஸ் திட்டத்தின் கீழ், 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் துப்பரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நியூ விங்ஸ் திட்டத்தின் கீழ், 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் துப்பரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி துவக்க நிகழ்ச்சி இன்று (01.02.2020) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கலந்து கொண்டு, துப்பரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் பயிற்சியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நியூ விங்ஸ் திட்டத்தின் கீழ் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் துப்பரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி இன்று துவக்கி வைக்கப்பட்டது. துப்பரவு பணியாளர்களின் குழந்தைகளும் துப்பரவு பணியில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காகவும், உயர் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவும், அரசின் நலத்திட்டங்களை தெரிந்து கொண்டு பயன் பெறுவதற்காகவும், நியூ விங்ஸ் திட்டம் நமது மாவட்டத்திற் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் துப்பரவு பணியில் ஈடுபடும் துப்பரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு கட்டங்களாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு தனியார் கல்லூரி நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு எளிதான முறையில் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஒய்வூதியம் பெறவும் வழிவகை செய்யப்புட்டு வருகிறது. மேலும், துப்பரவு பணியில் ஈடுபடும் துப்பரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு அவர்களிடம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

துப்பரவு பணியில் ஈடுபடும் போது, கை உறைகள், ஆடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் துப்பரவு பணியாளர்கள் குழந்தைகள். துப்பரவு பணியில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது என்பதற்காகவும், நல்ல முறையில் சிறந்த கல்வியை கற்று, பிற்காலத்தில் சிறந்த நிலையை அடைய வேண்டும். அதற்கு, எந்தவிதமான கல்வியை பெற வேண்டும் என்றும், வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்றால் மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் குறித்தும், இன்று தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக, 20 அல்லது 30 வருடங்கள் அனுபவம் பெற்ற பேராசிரியர்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. வீடுகள் இல்லாத துப்பரவு பணியாளர்களுக்கு வீடுகள் கடடி தரவும், பட்டா கிடைக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து இப்பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இன்று நடைபெறும் பயிற்சியில் சுமார் 200 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தூத்துக்குடி மாவட்டத்தில் நியூ விங்ஸ் திட்டத்தின் கீழ் 700 முதல் 800 வரை மாணவ, மாணவியர்கள் இணைந்துள்ளார்கள். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 60 மாணவ, மாணவியர்களுக்கு நியூ விங்ஸ் திட்டத்தின் கீழ் பல்வேறு நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.6 இலட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. துப்பரவு பணியாளர்களின் குழந்தைகள் 100 சதவீதம் கல்வி பெற்று, வாழ்வில் நல்ல நிலையை அடைய வேண்டும் என பேசினார். இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகசுந்தரம், வ.உ.சி கல்லூரி, உதவி பேராசிரியர் ஜசக் பாலசிங், மீன்வளக் கல்லூரி பேராசிரியர் சாந்தக் குமார், ஆர்வி.சி.இ. கல்லூரி தாளாளர் பிருந்தா ராகவன், விவேகம், நியூ விங்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.