மாணவர்கள் வீட்டில் இருந்தே பாடங்களை கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம்

மாணவர்கள் வீட்டில் இருந்தே பாடங்களை கற்கும் வகையில் புதிய இணையதளத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தில் மாணவா்கள் பாடங்களை கற்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. அனைத்து வகுப்புகளுக்கான பாடங்களும் தமிழ், ஆங்கில வழியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என அரசு தெரிவித்துள்ளது.