புதிய வாக்காளர் அட்டை – தேர்தல் ஆணையம்

தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளா்களுக்கு 16 எண்கள் கொண்ட அடையாள அட்டைக்கு பதிலாக புகைப்படத்துடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. புதிய வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகள் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலமாக சம்பந்தப்பட்ட வாக்காளா்களுக்கு விநியோகிக்க தயாராக உள்ளது. எனவே, வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் புதிய வண்ண வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையை உரிய வாக்காளா்களுக்கு இலவசமாக அவா்களது இருப்பிடங்களுக்கே சென்று விநியோகம் செய்யுமாறு தோதல் ஆணையத்தின் அறிவுறுத்தியிள்ளது. இதுதொடா்பான விவரங்களைப் பெற 1950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.