24 மணி நேரத்தில் புதிய சாதனை: வ.உ.சிதம்பரனார் துறைமுகம்

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மீண்டும் 24 மணி நேரத்தில் அதிகளவு நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் கப்பல் சரக்குதளம்-9 ல் நேற்று எம்.வி.மைசிர்னி என்ற கப்பலிலிருந்து 55,785டன் நிலக்கரியை 24மணி நேரத்தில் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இச்சாதனையானது, இதற்கு முந்தைய சாதனையான கப்பல் சரக்கு தளம்-9ல் எம்.வி. கீரின் கேமாக்ஸ் எஸ் என்ற கப்பலிலிருந்து 24 மணி நேரத்தில் கையாளப்பட்ட அளவான 55,363 டன்நிலக்கரியை விட அதிகமாகும். மார்ஷல் தீவு கொடியுடன் வந்துள்ள எம்.வி. மைசிர்னி என்ற பனமாக்ஸ் வகைகப்பல் 229 மீட்டர் நீளமும், 32.26 மீட்டர் அகலமும் மற்றும் 14.12 மீட்டர் மிதவை ஆழத்துடன்; இந்தோனேஷியா நாட்டிலுள்ள தஞ்சங் பரா என்ற துறைமுகத்திலிருந்து 76,999 டன் நிலக்கரியைவ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு எடுத்து வந்துள்ளது. இக்கப்பலில் வந்த 76,999 டன் நிலக்கரியும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இக்கப்பலிலிருந்து நிலக்கரியை இம்கோலாகிரேன் கம்பேனி பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும் மூன்று நகரும் பளுதூக்கி இயந்திரங்களால் 24 மணிநேரத்தில் 55,785 டன் நிலக்கரியை கையாண்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.இந்தசாதனையின் கப்பல் முகவர் சன் பீம் லாஜீஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடேட், தூத்துக்குடிமற்றும் ஸ்டிவிடோர் ஏஜெண்ட் செட்டிநாடு லாஜீஸ்டிக்ஸ் ஆவர்.

தூத்துக்குடி ஆவர். வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ராமச்சந்திரன், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இச்சாதனையை படைக்க காரணமாக இருந்து வரும் அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள்,அனைத்து அதிகாரிகள்,ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரையும் பாராட்டினார்.

மேலும் இது போன்ற சரக்கு போக்குவரத்து சாதனைநிகழ்வுகளுக்கு உகந்த உள்கட்டமைப்பு வசதிகள்,செயல்பாட்டுத் திறன் மற்றும் திறமைமிக்க ஊழியர்கள் ஆகியவை நம் துறைமுகத்தில் சிறப்பாகஅமையபெற்றுள்ளது என்றார்.