நாலாட்டின்புதூர் காவல் நிலையம் துவக்க விழா: தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம் : நாலாட்டின்புதூர் காவல் நிலைய புதிய கட்டிட துவக்க விழா 12.03.20 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது . விழாவினை திரு.அருண் பலகோபாலன்IPS (தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்) அவர்கள் துவக்கி வைக்க உள்ளார். விழாவானது திரு. ஜெபராஜ் M.Sc, B.Ed., (காவல் துணை கண்காணிப்பாளர், கோவில்பட்டி உட்கோட்டம்) அவர்கள் முன்னிலையில் நடைப்பெற உள்ளது. விழாவிற்கு கோவில்பட்டி உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆயினர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.