மீண்டும் ஜியோ வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வொர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மீண்டும் திடீரென ஜியோ நிறுவனம் செல்ஃபோன் கட்டணங்களை அதிகரித்து புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்தது. புதிய திட்டப்படி, 149 மற்றும் 9‌8 ரூபாய் திட்டங்கள் ஜியோ ரீ சார்ஜில் கைவிடப்பட்டன. தொடக்க கட்டணமாக 129 ரூபாய் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 98 ரூபாய்க்கு 2 ஜிபி, 300 எஸ்எம்எஸ், 28 நாள் சேவை கொண்ட திட்டத்தை மீண்டும் அறிவித்துள்ளது. அதேபோல 24 நாள், 24 ஜிபி டேட்டா, 300 நிமிட மற்ற நிறுவன அழைப்பு, 100 எஸ்எம்எஸ் என்ற 149 ரூபாய் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் ரீ சார்ஜ் கட்டணங்கள் உயர்வு ஜியோ வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.