இந்தியாவின் புதிய வரைபடம் – டெல்லி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக உதயமாகின. தற்போது இந்தியாவின் புதிய அரசியல் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் இரு யூனியன் பிரதேசங்களின் நிர்வாக எல்லைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவின் மொத்த மாநிலங்களின் எண்ணிக்கையானது ஒன்று குறைந்து 28 ஆக உள்ளது. யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 2 அதிகரித்து 9 ஆக உள்ளது.