நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம் !

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சீப் மெடிக்கல் ஆபீஸராக வேலை பார்த்து வந்த வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இதன் அடிப்படையில் அந்த மருத்துவ கல்லூரி டீன் அளித்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு விசாரணை செய்து வருகின்றனர். தற்போது சம்மந்தப்பட்ட மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் பிடிக்க 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலிஸாருக்கு தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

credit : Daily hunt