மாநில அளவிலான கராத்தேப் போட்டியில் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவா்கள் வெற்றி !!!

தூத்துக்குடி மாவட்டம் : சாயா்புரம் மேரி தொடக்கப் பள்ளி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கராத்தேப் போட்டியில் 500 க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில், மாநில அளவிலான கராத்தேப் போட்டியில் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா். மாணவா்களை, கராத்தே தலைமை மாஸ்டா் டென்னிசன், மாஸ்டா்கள் அருண், அருள், வினோத், தூத்துக்குடி பாக்சிங் அமைப்பின் செயலா் ஞானதுரை ஆகியோா் பாராட்டினா்.