கணிதத்தின் முன்னேற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கு : தூத்துக்குடி

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) கணிதத்துறை சார்பாக கணிதத்தின் முன்னேற்றங்கள் குறித்த இரண்டு நாள் (12.03.2020,13.03,2020) தேசிய கருத்தரங்கு நடத்தப்பட்டது. கருத்தரங்கில் முனைவர் கலா, மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பேராசிரியர் விஜயராஜூ( அண்ணா பல்கலைக்கழகம் சென்னை), முனைவர் உதயகுமார் (காந்திகிராம் கிராமப்புற நிறுவனம்), முனைவர் லெலிஸ் திவாகர் (காமராஜ் பல்கலைக்கழகம் மதுரை), முனைவர் ஜில் மத்தேயு, (மார் ஐவானியோஸ் கல்லூரி தன்னாட்சி) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி லூசியா ரோஸ், சுயநிதி பிரிவு இயக்குனர் அருட் சகோதரி மேரி ஜாய்ஸ் பேபி மற்றும் கணிதத் துறை தலைவர் முனைவர் புனிதா தாரணி ஆகியோர் கருத்தரங்கை தலைமை தாங்கி துவக்கி வைத்தனர். பல்வேறு கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்களும் மாணவிகளும் இக்கருத்தரங்கில் பங்கேற்று தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.