தேசிய குடிமக்கள் பதிவேடு இணையத்தில் வெளியானது – அஸ்ஸாம்

நாட்டிலேயே முதன்முறையாக அஸ்ஸாமில் குடிமக்கள் பதிவேடு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. அதில் ஒரே குடும்பத்தில் ஒருவரை இந்தியர் என்றும் மற்றொருவரை அகதி என்றும் வகைப்படுத்தியது என பல்வேறு குளறுபடிகள் இந்த பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அஸ்ஸாம் மாநில மக்களுக்கான தேசிய குடிமக்கள் பதிவேடு அதிகாரப்பூர்வ அரசு www.nrcassam.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே பட்டியலில் இடம் பெற்ற பலரது பெயர் இந்த இணையத்தில் இல்லை என்று கூறப்படுவதால், அஸ்ஸாம் மக்கள் மத்தியில் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெயர் விடுபட்டிருக்கும். எனவே கவலைப்பட வேண்டும். வரும் நாட்களில் சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், குறிப்பிட்ட பிரிவினரின் பெயர்கள் மட்டுமே காணாமல் போய் உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.