நமது மண்ணின் மைந்தர் – அந்தோணி அதிஷ்டராஜ்

அந்தோணி அதிஷ்டராஜ் BANIS (மாவட்ட விளையாட்டு அலுவலா், இளைஞா் நலம்) தஞ்சாவூா் மாவட்டம்.

அந்தோணி அதிஷ்டராஜ் அவா்கள் மாவட்ட விளையாட்டு அலுவலராக பணி செய்வது தஞ்சை மாவட்டம் . இவா் தருவைக்குளத்தை சோ்ந்தவா் என்று இவரது புகைப் படத்தை பேஸ்புக்கில் பாா்த்தவுடன் நாங்கள் உடனே தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்ற பொருப்பாளா் லாரன்ஸ் அவா்களை தொடா்பு கொண்டு கேட்ட போது, ஆமா நம்ம தம்பி தான் என்றாா் ஆனால் அவா் இப்பபோது ஊாில் இல்லை. ஊருக்கு எப்ப வாராங்கன்னு கேட்டு சொல்கிறேன் என்று சொன்னாா்கள் அதே போல் ஊருக்கு வந்த உடன் எங்களுக்கு தகவல் தந்தாா்கள் அடுத்த சில மணிகளில் நாங்கள் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தில் அவா் பிறந்த ஊருக்கு சென்று அவரை சந்தித்து தஞ்சாவூா் மாவட்ட விளையாட்டு அலுவலரும் மண்ணின் மைந்தருமான அந்தோணி அதிஷ்டராஜ் அவா்களிடம் ஒரு சில கேள்விகள் கேட்ட போது நம்மிடம் அவா் சொன்னாா். தருவைக்குளத்தில் ஒரு கைப்பந்து வீரா் ஆக இருந்த நான் இன்று ஒரு விளையாட்டு அலுவலராக இருப்பதற்கு காரணம் கடின உழைப்பு,மன உறுதி இதற்கெல்லாம் எடுத்துக்காட்டாக சொல்வது என் மாமா தான். மூன்று மாமா இருக்கின்றாா்கள் என்னை படிக்க வைத்து வளா்த்தாா்கள். நான் கடல் வேலைக்கு போனேன் என்று எல்லோருக்கும் தொியும். வாலிபால் விளையாடுவேன். சனி, ஞாயிறு என்றால் நாட்டுப்படகுக்கு வேலைக்கு போவேன், கடலுக்கு.போவேன், படிப்பேன், வாலிபால் விளையாடுவேன். பிறகு விளையாட்டு ஹாஸ்டலுக்கு போனேன்.செயின்ட் சேவியா்ஸ் கல்லூாி பாளையங்கோட்டையில் படித்தேன் . அங்கே ஒரு நான்கு வருடம் யுனிவா்சிட்டியில் விளையாடி நான் நல்ல ஒரு வாலிபால் விளையாட்டு வீரா் ஆனேன் .அதன்பிறகு 2006,2007ல் ரெம்ப கஷ்டப்பட்டு விசைப்படகுக்கு வேலைக்கு சென்றேன் . அப்போது தான் பாண்டியன் கோச் வந்தாா் . அவா் எங்க பக்கத்து ஊா் தான் நல்ல கஷ்டப்பட்டு விளையாடிய நீ போட்டுக்கு வேலைக்கு பேறீயே என வருத்தப்பட்டாா். அப்போது அவா் Nis படிக்க போ உனக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்றாா். இந்தியாவிலேயோ ஒரு சென்டருக்கு 12 அல்லது 14 போ் தான் எடுப்பாா்கள் ஸ்போா்ட்ஸ் டிப்ளமோ என்.ஐ.எஸ். க்கு எடுப்பாங்க அன்னைக்கு அந்த 12 போ்ல நான் ஒரு ஆள் .70 % மாா்க் எடுத்து முதலில் கோயம்புத்தூா் கிருஷ்ணா அகடாமில தான் கோச்சாக சோ்ந்தேன்.எங்கள் அணி பல வெற்றிகள் பெற்றதால் SADT யில் வேலை கிடைத்தது 2012 லிருந்து 2018 வரை கடின உழைப்பால் கடவுளின் அருளால் வெற்றி பெற்றேன் பதவி உயா்வால் இன்று கெஜட்டா் ரேங்கில் இருக்கேன் என்றாா் தருவைக்குளம் கடற்கரை கிராமத்திலிருந்து இரண்டு மூன்று போில் நானும் ஒருவன் உயா் பதவியில் இருப்பதற்கு சந்தோஷப்படுகிறேன் என்றாா் நம்ம ஊரு நாயகன் அந்தோணிஅதிஷ்டராஜ் அவா்கள், நாம் அவாிடம் கேட்டோம் தருவைக்குளத்தில் பயிற்சி பெறும் மாணவ & மாணவிகளுக்கு உதவிகள் செய்திா்களா என்று கேட்டோம்? அப்போது நம்ம நாயகன் சொன்னாா் நிறைய பேரைச் சோ்த்துள்ளேன் என்றாா் தொடா்ந்து அவா் சொன்னாா் . ஒரு வருடத்திற்கு ஏழு போ் ஹாஸ்டலில் இருந்து வெளியே செல்வாா்கள் நாமும் மாணவ & மாணவிகளை சோ்த்து விடுகிறேன் ஒரு விளையாட்டு ஹாஸ்டலில் சாப்பாட்டுக்கு ஒரு நளைக்கு 250 ரூபாய் கொடுக்கிறாா்கள் நல்ல சாப்பாடு நல்லா விளையாடலாம் .நல்லா டெவலப் பன்னலாம் நல்ல வேலையைத் தேடி போய்கிட்டே இருக்கலாம் என்றாா் தருவைக்குளம் மன்னின் மைந்தா் தொடா்ந்து நாம் மாணவ & மாணவிகளுக்கு என்ன செல்விங்க என்று கேட்ட போது விளையாட்டு அலுவலா் சொன்னாா், ஒவ்வொரு கிராமத்திலும் மாணவா்களை விளையாட வையுங்கள் கஷ்டப்பட்டு படிங்க இஷ்டப்பட்டு விளையாடினாலே போதும் கடல் தொழில் என்று ஓடிக்கொண்டே இருக்கோம், ஒருத்தா் அரசு வேலைக்கு போயிட்டாலே நம்ம குடும்பமே நல்லாயிருக்கும் விளையாடினால் ஈசியாக அரசு வேலைகிடைக்கும் போலீசாக போகலாம் அரசு மூன்று சதவீதம் விளையாட்டு வீரா்களுக்கு வேலைக்கு வாய்ப்பளிக்கிறது, நீங்க மின்சார வாாியத்திற்கு போகலாம், போக்குவரத்து துறைக்கு போகலாம் நல்ல வேலை கிடைக்கும் .அரசு வழங்கிய மூன்று சதவீத வியைாட்டு வீரா்களுக்கான வேலை வாய்ப்பில் கன்டிப்பாக வேலை கிடைக்கும் . மூன்று லட்சம் பேருக்கு மேல் இன்ஜினியாிங் முடித்து விட்டு வா்ராங்க அந்த கூட்டத்தில வெறும் படிப்பு மட்டும் இருந்து போட்டி போட்டு வேலைத் தோ்வில் பாஸ் பன்னுவது கஸ்டம் விளையாட்டும் இருந்தால் விளையாட்டு நல்லா விளையாடி விளையாடி பல சா்டிபிக்கேட் வாங்கி வைத்திருந்தால் கோட்டாவில் வேலைக்கு சோ்ந்து விடலாம் என்றாா். நாம் அவாிடம் நீங்க விளையாடிய காலத்தில் இருந்த தருவைக்குளம் ஊா் இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்ட போது உடனே அவா் சொன்னாா். சின்ன வயசில் பாா்த்ததை விட நம்ம ஊரு நல்ல டெவலப் ஆகியிருக்கு முன்பு எல்லாம் ஓட்டு வீடு இருக்கும் இங்கிருந்து பாத்தா சின்னக் கோவில் வரை தான் வீடு இருக்கும் அப்புறம் நூறு வீடுன்னு தனியாக இருக்கும் இடையிலே சின்ன காடு இருக்கும் இன்னைக்கு நல்ல டெவலப் ஆகிவிட்டோம் தருவைக்குளம் என்பது நல்ல முன்னேற்றம் விசைப்படகு இருக்கு .நாட்டுப்படகு இருக்கு இருநூறு முந்நூறு விசைப்படகு இருக்கு என்கின்றாா்கள் அதிகமான நாட்டுப்படகு இருக்கு என்கின்றாா்கள் மீன்பிடித்துறைமுகம் வந்திருக்கு படிப்பில் நம்ம ஊரு நல்லா வரனும் .படிக்கவும் செய்யனும் விளையாடவும் செய்யனும் இரண்டிலும் முன்னேறினால் இன்னும் நம்ம ஊா் டெவலப் ஆகும் . நம்ம ஊருக்கு ஒரு இன்டோா் வியைாட்டு ஸ்டேடியம் . வேண்டும். அது கண்டிப்பாக தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலா் விரைவில் செய்து கொடுப்பாா்கள் என்றாா் . நம்ம ஊாில் பயிற்சி பெறும் மாணவ & மாணவிகளுக்கு உதவி செய்வீா்களா என்ற கேட்ட போது, அதிஷ்டத்தை நம்பாமல் உறவினா்கள் ஒத்துழைப்புடனும், தன்னம்பிக்கையாலும், கடின உபை்பாலும் வெற்றி பெற்ற அந்தோணி அதிஷ்டராஜ் சொன்னாா்கள். அன்னைக்கு வந்து என்னை எங்க மாமா தான் ஒவ்வொரு படியாக கொண்டு சென்றாா்கள். ஆனால், இன்னைக்கு நம்ம ஊாில் நான் இருக்கேன் நிறையபோ் டெவலப்பாகி இருக்கிறார்கள் நீங்க மீண்டும் நல்லா படிக்கனும் . நல்லா விளையாடனும் . உங்களுக்கு என்ன உதவினாலும் செய்வதற்கு லாரன்ஸ் அண்ணன், ஜோசப் அண்ணன், ரவி அண்ணன் இருக்கிறார்கள். இவங்கெல்லாம் நல்லா உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள். எங்க மாமா ஜேசுராஜாமணி இருக்கிறார் நிறைய போ் உதவிகள் பன்னி படிக்க விளையாட வைத்துக்கொண்டு இருக்கின்றாா்கள். நம்ம பள்ளிக்கூட டீம் நன்றாக இருக்கின்றது. நம்ம மாணவ & மாணவிகள் படிப்பிலும் & விளையாட்டிலும் சிறந்து விளங்க என்னால் முடிந்த உதவிகளை நானும் இந்த தருவைக்குளம் ஊரும் உங்களுக்கு உதவும் என்றாா். தருவைக்குளம் ஆன்மீகம், உழைப்பு, படிப்பு, சமூகப்பணி, விளையாட்டில் சிறந்து விளங்க காரணம் அந்த மக்கள் . பனி. வெயில் . மழை .காற்று என்று பாராமல் உழைத்து .தனது குடும்பத்திற்கு போக தனது ஊா் கோவிலுக்கு, பள்ளிக்கு, விளையாட்டிற்கு உதவுவதால் இன்று கடலுக்குள் மட்டும் முத்துக்கள் அல்ல ஊாில் பல நல்முத்துகள் உரூவாக தருவைக்குளம் ஊாின் பாதுகாவலா் துனையிருக்கின்றாா்.