தூத்துக்குடி தொகுதி மற்றும் விளாத்திக்குளம் தொகுதி சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு -நாம்தமிழர்கட்சி

நாம்தமிழர்கட்சியின் தூத்துக்குடி தொகுதி மற்றும் விளாத்திக்குளம் தொகுதி சார்பில் இன்று (17.02.2020) திங்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது

நிகழ்வில் தூத்துக்குடி தொகுதி தலைவர் செந்தில்குமார் மத்திய மாவட்ட தலைவர் சசிக்குமார் சுற்றுசூழல் பாசறை மாவட்டசெயலாளர் மரியஆன்ஸ் தூ.டி.தொகுதி பொறுப்பாளர் செல்லப்பா வீரத்தமிழர் முன்னனி தூ.டி.தொகுதி பொருப்பாளர் நூ.தமிழ்(சபரி) விளாத்திக்குளம் தொகுதி சார்பில் தொகுதி செயலாளர் காளிதாஸ் வேம்பார் பெரியசாமிபுரம் பொருப்பாளர் சிலுவை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மனுவிவரம்.

1) தூத்துக்குடி துறைமுகத்தில் சீனக்கப்பலை அனுமதித்தது ஏன் ?கொரானா வைரஸ் பரவி வரும் நேரத்தில் சீனக்கப்பல் தூ.டி.வந்து சரக்கு இறக்கியுள்ளது
இது குறித்து முறையான அரசு அறிக்கை வெளியிட வேண்டும்

2) விளாத்திக்குளம் வேம்பார்
பெரியசாமி புரத்தில் சுகாதார சீர்க்கேட்டை உருவாக்கும் நண்டு கழிவு கம்பெனியை அப்புறபடுத்தகோரி

3) கடுமையான போக்குவரத்து நெருக்கடியாகும் 2ம் கேட் சாலையை ஒருவழி பாதையாக மாற்றவும்,மினிபஸ்களை நகருக்குள் அனுமதிக்ககூடாது எனவும்

4) திருச்செந்தூர் ரோடு காமராஜர் மெடரிகுலேசன் பள்ளி இருக்கும் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுகடையை அகற்றகோரி

5) வேலவன் ஹைப்பர் வாயில் பகுதில் திமுகவினர் அதிகாரத்தில் அத்துமீறி வைத்துள்ள பெயர்பலகையையும் ,ஆட்டோவையும் அப்புறபடுத்த கோரி
நாம்தமிழர்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது