ஏரல் இரட்டைக் கொலை: 8 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது – எஸ்பி ஜெயக்குமார் அதிரடி

ஏரல் காவல் நிலைய இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை 8 மணி நேரத்தில் கைது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்

சிவகளை பரம்பு கோவில் தெருவைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் விக்னேஷ் ராஜா (22) என்பவருக்கும் ஏரல் முதலியார் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் முத்துராமலிங்கம் என்ற ராஜா (23) என்பவரது சகோதரி சங்கீதா என்பவருக்கும் கடந்த 18.06.2020 அன்று விக்னேஷ் ராஜா வீட்டார் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் நடை பெற்றுள்ளது.

இந்நிலையில் விக்னேஷ் ராஜா, தனது மனைவி சங்கீதா மூலம் பெண் வீட்டாரிடம் 40 பவுன் நகை கேட்டு தொந்தரவு செய்துள்ளதாகவும், அதனால் அவர்கள் இருவர் குடும்த்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விக்னேஷ் ராஜா, தனது பெற்றோரை பார்ப்பத்ற்காக சிவகளை சென்றிருந்தார். இதையறிந்த சங்கீதாவின் சகோதரர் முத்துராமலிங்கம், அவரது உறவினர் பொட்டல் ஊரைச் சேர்ந்த சுந்தரம் மகன் முத்துச்சுடர் (19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அய்யாப்பிள்ளை மகன் அருணாச்சலம் (25) ஆகியோர் நேற்று சிவகளை சென்று (02.07.2020) இரவு சுமார் 9 மணியளவில் அங்கிருந்த விக்னேஷ் ராஜா, அவரது தந்தை லெட்சுமணன் (52), தாயார் முத்துப்பேச்சி (42) மற்றும் உறவினர் அருண் மகேஷ் (26) ஆகியோரை அரிவாளால் தாக்கியுள்ளனர்.

இதில் விக்னேஷ் ராஜாவின் தாயார் முத்துப்பேச்சி மற்றும் அவரது உறவினர் அருண் மகேஷ் ஆகியோர் இறந்து விட்டனர். இச்சம்பவம் அறிந்த ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டதன் பேரில் தனிப்படையினர் சம்பவம் நடந்த 8 மணி நேரத்தில் குற்றவாளிகளை 3 பேரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். இது பொது மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது