மும்பையில் பருவமழையும் புகார்களும்

மும்பையில் பருவமழையால் சாலைகள் சேதமடைந்துள்ளன. பல்வேறு சாலைகளில் பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, சாலைகள் உடனே சரி செய்யப்பட்டன. இந்த நிலையில், மும்பை மாநகராட்சி புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி, சாலையில் 3 அங்குல ஆழம், ஒரு அடி நீளத்துக்கு மேல் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள், மொபைல் செயலி வாயிலாக புகார் செய்யலாம். அந்தப் பள்ளங்கள் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும். இந்த காலக்கெடுவுக்குள் பள்ளம் சீரமைக்கப்படாவிட்டால் புகார் அளித்தவருக்கு ரூ.500 வழங்கப்படும். இந்த திட்டம் வரும் 7-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த திட்டம் மக்களுக்கிடையே பெரும் வரவேற்ப்பை ஏற்படுத்தி உள்ளது