ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பணக்கார பிச்சைக்காரர்

கடந்த வெள்ளிக்கிழமை மான்கூர்டுக்கும் கோவண்டிக்கும் இடையே ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பிச்சைக்காரர் மரணம் அடைந்தார். தண்டவாளத்தில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாஷி ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணை நடத்திய போது அவருடைய பெயர் ஆசாத் என்றும் அவர் கோவண்டியில் தனியாக ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தார் என்றும் சொந்தம் என்று யாரும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. உடனே போலீசார் ஆசாத் தங்கியிருந்த குடிசைக்கு சென்று சோதனை செய்தனர். இரண்டு நாட்களாக எண்ணி முடிக்கப்பட்ட பின்னர் அவரிடம் சில்லரையாக மொத்தம் ₹1.75 லட்சம் இருந்தது தெரிய வந்தது. மேலும் அவருடைய ஆதார் கார்டு, பான் கார்டு, உள்ளிட்ட ஆவணங்கள் வைத்து அவர் ராஜஸ்தானில் உள்ள ராம்கார்க் என்ற இடத்தை சேர்ந்தவர் என்றும் அங்கு சுக்தேவ் என்ற மகன் இருப்பதும் தெரிந்தது. மேலும் இரு வங்கிகளில் ஆசாத் மொத்தம் ₹8.77 லட்சம் வைப்பு தொகை டெப்பாசிட் செய்திருந்தார். அதற்கான ஆவணங்களும் அந்த பெட்டியில் இருந்தது. மேலும் இரு வங்கிகளில் சேமிப்பு கணக்கில் மொத்தம் ₹96,000 டெப்பாசிட் செய்திருந்தார். வங்கி கணக்குகளில் தன் மகன் சுக்தேவின் பெயரை வாரிசாக பதிவு செய்திருந்தார். இதனை தொடர்ந்து சுக்தேவை கண்டுபிடித்து உடலை ஒப்படைக்கு முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.