எம்.டெக். படிப்புக்கான கல்விக் கட்டணம் உயர்வு – சென்னை ஐஐடி

எம்.டெக். படிப்புக்கான கல்விக் கட்டணம் பல ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படவில்லை. மற்றும் எம்.டெக்., மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்கும் வகையிலும் கல்விக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் சேரப் போகிறவர்களுக்குத்தான் இந்தக் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கும், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை இப்போதுள்ளது போன்றே தொடர்ந்து வழங்கப்படும் என சென்னை ஐஐடி செய்தி வெளியிட்டுள்ளது