காய்கறி அங்காடி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் : அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடமாடும் காய்கறி அங்காடி வாகனத்தினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து ரூபாய் ரூ.100 மதிப்பிலான 12 வகையான காய்கறிகள் உள்ளடங்கிய பைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி.சத்யா அவர்கள், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.விஜயா, நகராட்சி ஆணையர் திரு.ராஜாராம், முக்கிய பிரமுகர்கள் திரு.அய்யாத்துரை பாண்டியன், திரு.விஜய பாண்டியன் மற்றும் அலுவலகங்கள் உள்ளன.