டாஸ்மாக் கடையால் நிம்மதி இழந்த தாய்: குடித்துவிட்டு தகராறு செய்யும் மகன்

தூத்துக்குடி, அத்திமரப்பட்டி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி மனைவி தங்கபுஷ்பம் இவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் எனது மகன் சின்னத்துரை (35) தினமும் மது குடித்துவிட்டு வந்து என்னை அடித்து கொடுமைப் படுத்துகிறான்.சில நாட்களாக மதுக்கடைகள் மூடி இருந்தபோது நிம்மதியாக இருந்தேன். தற்போது டாஸ்மாக் மீண்டும் திறந்த பிறகு நிம்மதி இழந்து நிற்கிறேன். எனது மகனின் குடி பழக்கத்தால் எனது மருமகள் அவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் மேலும் என்னை துன்புறுத்தி வரும் எனது மகனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார்