நடமாடும் காய்கறி வண்டிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தொடங்கி வைத்தார் : கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் இரண்டு நடமாடும் காய்கறி வண்டிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அவர்கள் தொடங்கி அனைத்து பொது மக்களுக்கு காய்கறிகளை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி.ஆர்.சத்யா மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் திரு.பி மோகன் இணை இயக்குனர் வேளாண்துறை திரு.முகைதீன் மற்றும் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.