700 பேருக்கு நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினார் : ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் லாரி ஓட்டுனர்கள் 700 பேருக்கு நிவாரண உதவிப் பொருட்களை தலைவர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் லாரி ஓட்டுனர்கள் கிளீனர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது இதில் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் என்.பி ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு சுமார் 700 பேருக்கு அரிசி காய்கறிகள் மற்றும் பலசரக்கு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் விவேகானந்தன் பொருளாளர் சீனிவாசன் துணைச் செயலாளர் முருகன் துணைத்தலைவர் அமுல்ராஜ் லாரி புக்கிங் ஏஜென்சி சங்கத்தலைவர் சுப்புராஜ் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்