15க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் : தூத்துக்குடி

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தடை உத்தரவை மீறி சாலைகளில் வாகன நடமாட்டம் அதிகரித்து வருவதால் தேவையில்லாமல் சுற்றித்திரியும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் தூத்துக்குடியில் 2வது ரயில்வே கேட் மற்றும், டபிள்யூ.ஜி.சி., ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் வெங்கடேஷ் மற்றும் சிவகுமார் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அனாவசியமாக சுற்றித்திரிந்த 15க்கும் மேற்பட்ட பைக், ஸ்கூட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே மாஸ்க் அணியாமல் வந்த காவலாளி ஒருவருக்கு, போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் சிவகுமார், அறிவுரைகளை கூறி மாஸ்க் அணிவித்து விட்டார்