ஊரடங்கு உத்தரவை ஒட்டி தகுந்த காரணங்கள் இல்லாமல் வெளியே சுற்றத்திரிந்தவா்கள் மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 144-யை மீறியதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அரசு அதிரடியாக முடிவெடுத்தது. இதன்படி செயற்பட்ட தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இதுவரை 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பாக 198 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா். அவா்களிடம் இருந்து இதுவரையில் 128 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
