விமான நிலையத்தில் நவீன உபகரணங்கள் தொடக்க நிகழ்ச்சி : தூ.டி

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பயணிகள் போக்குவரத்து கொண்டே அதிகரித்து வருகின்றன. இதனால் ஒருபக்கம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளும் நடந்து வரும் நிலையில் மறுபக்கம் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு உள்ளன. அந்த உபகரணங்கள் தொடக்க நிகழ்ச்சி விமானநிலைய வளாகத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சி.யை தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் என்.சுப்பிரமணியன் தலைமை தாங்கி, நவீன கருவிகளின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். கூடுதலாக வருவாய் கலெக்டர் வி‌‌ஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் ஆகியோரும் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்பதற்கான நவீன கருவிகளின் செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் விமான நிலைய மேலாளர் ஜெயராமன், மற்றும் போலீசார், பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விமான நிலையத்தில் வாங்கப்பட்ட நவீன கருவிகள்: தற்போது, பயணத்தின் போது ஏதேனும் விபத்து நடந்தால், விபத்தில் காயம் அடைந்தவர்களை கண்டறிந்து உடனடியாக மீட்டு சிகிச்சை அளிப்பதற்கான சுமார் ரூ.32 லட்சம் செலவில்  நவீன கருவிகள் வியன்னாவில் இருந்து வாங்கப்பட்டு உள்ளது. இந்த கருவி மூலம் 500 மீட்டர் தொலைவில் உள்ளவர்களின் இதய துடிப்பை வைத்து எளிதில் காயம் அடைந்தவர்களை கண்டறிய முடியும். அதே போல் தண்ணீர் மற்றும் காங்கிரீட் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களையும் கண்டறிய முடியும்.

மேலும் காங்கிரீட் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் நிலையை அறிய நவீன கருவி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஜப்பானில் இருந்து வாங்கப்பட்டு உள்ளது. இந்த கருவி மூலம் இடிபாடுகளுக்கு இடையே சிறிய துளையிட்டு அதற்குள் கேமராவை செலுத்தி இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவரின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

மற்றும் முதலுதவி அளிப்பதற்கும், உயிர் இழந்தவர்களின் உடலை மீட்டு வைப்பதற்கும் ரூ.9 லட்சம் செலவில் 2 தற்காலிக கூடாரமும் வாங்கப்பட்டு உள்ளது. மேலும் தூத்துக்குடி விமானநிலையத்தில் இருந்து பயணிகள் எளிதில் கார் மூலம் வீட்டுக்கு செல்ல வாடகை கார் சேவையும் தொடங்கப்பட்டது.