22 லட்சம் மதிப்பில் நவீன தானியங்கி ஆர்.என்.ஏ.பிரித்தெடுப்பான் கருவி: தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பரவல் இல்லை கொரோனா பரவல் தாக்கம் குறையும் இதனால் மக்கள் தேவையின்றி கொரோனா குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா முடிவுகளை விரைவாக தெரிந்து கொள்ளும் வகையில் 22 லட்சம் மதிப்பில் நவீன தானியங்கி ஆர்.என்.ஏ.பிரித்தெடுப்பான் கருவி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆயவகத்தை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

சென்னை உள்பட வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் இனி தூத்துக்குடியில் நோய் பாதிப்பு எண்ணிக்கை குறையும். இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தின் மூலம் கொரோனா பற்றிய ஆய்வு முடிவுகளை 30 நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும். இதன் காரணமாக அதிகளவிளான பரிசோதனை கள் செய்ய இயலும்.தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை 25000க்கும் மேல் பரிசோதனைகள் செய்யபட்டுள்ளன.இதில் 756 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது வரை நமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக இல்லை. இதனால் மக்கள் தேவையின்றி கொரோனா குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபலன், மருத்துவகல்லூரி முதல்வர் ரேவதி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.