நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி : தூத்துக்குடி

நாடு முழுவதும் கொரானா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சரஸ்வதி தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று துவங்கியது.
அப்போது அவர் கூறுகையில், பொதுமக்கள் மலிவான விலையில் காய்கறிகள் விற்பனை செய்வதற்காக இந்த நடமாடும் விற்பனை நிலையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இனி வாகனம் மூலம் புதுக்கோட்டை பகுதிகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும். இதுபோலவே மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் விற்பனை நிலையம் செயல்படும். அங்கு சின்ன வெங்காயம் கிலோ ரூ.75, பெரிய வெங்காயம் ரூ.30, தக்காளி ரூ.25, மிளகாய் ரூ.40, தேங்காய் ரூ.35, கத்திரிக்காய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.40, பீட்ரூட் ரூ.50, கேரட் ரூ.60 என்ற விலைகளில் விற்பனை செய்யப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் வேளாண் துறை இணை இயக்குநர் முகதீன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.