தூத்துக்குடியில் கேட்பாரற்று கிடந்த இரு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமையில் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கேட்பாரற்று சாலையில் நின்ற வாகனங்கள் என சுமார் 65 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் அதில் உள்ள எஞ்சின் எண் ஆகியவற்றை வைத்தும், இணையதளம் மூலமாகவும் விசாரணை செய்து வாகன உரிமையாளர்களை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று தென்பாகம் காவல் நிலையத்தில் வாகன உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமையில் ஒப்படைக்கப்பட்டது.
இதில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. குமார், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், பயிற்சி துணை கண்காணிப்பாளர் திரு. ராகவேந்திரா கே. ரவி, தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. கிருஷ்ணகுமார், வடபாகம் காவல் ஆய்வாளர் பொறுப்பு திருமதி. பிரபாவதி, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வனிதா, தாளமுத்துநகர் பொறுப்பு காவல் ஆய்வாளர் திருமதி. பிரேமா ஸ்டாலின் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.