தூத்துக்குடியில் அதிசயம்

தமிழகத்தில் வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. அந்த வகையில் இன்று தூத்துக்குடியில் பூபால்ராயர்புரம் அன்னத்தாய் மண்டபம் அருகே உள்ள மாநகராட்சி பூங்கா வேப்பமரத்தில் காலை முதல் பால் வடிந்து வருகிறது. வேப்ப மரத்தில் இருந்து வரும் பிசுரு நெடுநாட்களாக வெளியேறாமல் இருப்பின், மரத்தின் வெப்பத்தை பிசுரு பாலாக மாறி வெளியேறுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் வந்து அதனை பார்த்து தங்கள் செல்போனில் வேப்பமரத்தில் பால் வடிந்து வருவதை படம் எடுத்து இதை சமூக வலை தளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு நபர் வேப்ப மரத்தின் இருந்து கசிந்து வரும் பாலை ஒரு தண்ணீர் கேனில் பிடித்து கொண்டு இருக்கும் நிகழ்வை வீடியோ-வில் பார்க்கலாம்.