தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.க.அ.தி.மு.க செயலாளர் திரு.S.P.சண்முகநாதன் அவர்கள் செய்திருந்தார் மற்றும் இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி அவர்கள் தலைமை தாங்கினார். இதில் ஒரு மண்டலத்தில் ஏழு டிப்போவில் 5000 பேருக்கு முகக்கவசம் மற்றும் கையுறை வழங்கப்பட்டது.
