வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவிப்பு

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளையொட்டி கட்டாலங்குளத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரரான வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.