நிவாரண பொருட்கள் வழங்கல் : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி ஒரு கிலோ பருப்பு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவற்றை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்கள் வழங்கினார்.

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்திப் நந்தூரி இ.ஆ.ப சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பி சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), திரு.சின்னப்பன் (விளாத்திகுளம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளன.

மேலும் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சியில் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் 25 அரிசி, 50 எண்ணிக்கை மொத்தம் 1250 கிலோ அரிசி ஸ்பிக் நிறுவனத்தின் இயக்குனர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்களிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 10 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் சமூக நலத்துறை மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரானா நிவாரண தொகை ரூ. ஆயிரம் ஆகியவற்றை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்கள் வழங்கினார்.

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்திப் நந்தூரி இ.ஆ.ப சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பி சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), திரு.சின்னப்பன் (விளாத்திகுளம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப,மாநகராட்சி ஆணையர் திரு.வி.பஜெயசீலன் இ.ஆ.ப., சமூகநல அலுவலர் திருமதி. தனலட்சுமி, மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளன.