கோவில்பட்டி நாலட்டின்புதூர் பகுதியில் 5 ஊராட்சிகளுக்கு கூடுதல் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்.

கோவில்பட்டி நாலட்டின்புதூர் பகுதியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17 லட்சம் செலவில் 5 ஊராட்சிகளுக்கு கூடுதல் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாலட்டின்புதூரில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டப் பணிகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் பல்வேறு ஊரணிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17 லட்சம் மதிப்பில் இனாம்மனியாச்சி, மந்திதோப்பு, இழப்பையூரணி, திட்டன்குளம், பாண்டவர்மங்கலம் ஆகிய 5 ஊராட்சி பகுதிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்;. 
மேலும் ஊரக வளர்ச்சி முகமை மூலம் குடிமராமத்து திட்டதின் கீழ் இடைசெவல் ஊரணி ரூ.9 லட்சம் செலவிலும், உப்பு ஊரணி ரூ.2 லட்சம் செலவிலும், நாலாட்டின்புதூர் அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவில் தெப்பக்குளம் ரூ.9 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகளையும் துவக்கி வைத்தார்.பின்னர் அமைச்சர் தெரிவித்தாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறையின் மூலம் கண்மாய்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, மழைநீரை சேமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். அதன் அடிப்படையில் நமது மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் குடிமராமத்து திட்டத்தின் கீழ்; பல்வேறு கண்மாய்கள் பொதுப் பணித்துறையின் மூலம் தூர்வாரி, மழைநீர் சேமிக்கப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கப்பட்டு வருகிறது. 
மேலும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மாவட்டங்களில் உள்ள சிறிய ஊரணிகள், குட்டைகள் ஆகியவை தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இன்று கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட இடைசெவல் ஊரணி ரூ.9 லட்சம் செலவிலும், உப்பு ஊரணி ரூ.2 லட்சம் செலவில், நாலாட்டின்புதூர் அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவில் தெப்பக்குளம் ரூ.9 லட்சம் செலவிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. வருகிற மழை காலங்களுக்கு முன்பாக குடிமாரமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் தரமாக முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.முன்னதாக வில்லிசேரி பகுதியில் மாவட்ட ஊராட்சி சேமிப்பு நிதி ரூ24.48 லட்சம் செலவில் கிருஷ்ணாநகர் முதல் குறுக்குத்தெரு வரை 500 மீட்டர் தூரம் மேற்கொள்ளப்பட உள்ள தார்சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப்பொறியாளர் செந்தூர் பாண்டி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் குழுத்தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துனைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பிரியா, சந்திரசேகர், கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன், வில்லிசேரி ஊராட்சி தலைவர் வேலன், இடைசேவல் ஊராட்சி தலைவர் ரங்கநாயகி, நாலாட்டின்புதூர் ஊராட்சித்தலைவர் கடல்ராணி அந்தோணிராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, ஒன்றிய பொறியாளர் தமிழ்செல்வன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முக்கிய பிரமுகர்கள் அய்யாத்துறைபாண்டியன், விஜயபாண்டியன், சுப்புராஜ், மகேஷ்குமார், கிருபாகரன் மற்றும் அலுவலர்கள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.