புல்வாமா தாக்குதல் நினைவு நாள்

கடந்த வருடம் இதே நாள்(Feb-14) ஜெய்சு-இ-முகமது என்ற திவரவாத அமைப்பினால் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.இத்தாக்குதலை தான் புல்வாமா தாக்குதல் என்கிறோம். இத்தாக்குதலில் 40 பாதுகாப்பு படை வீரர்களும்,தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பன்னிரண்டு வீரர்களும், ராஜஸ்தானைச் சேர்ந்த ஐந்து வீரர்களும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு வீரர்களும், தமிழ் நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த தலா இரண்டு வீரர்களும், அஸ்ஸாம், கேரளா, கருநாடகா, மத்தியப் பிரதேசம், இமாச்சல் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒரு வீரர்களும் இத்தாக்குதலில் இறந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டனர்

அதில் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த கணபதி என்பவரது மகன் க. சுப்பிரமணியன்(28) மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரது மகன் சி. சிவசந்திரன் என்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களாவார்கள்.

இதுவரை நடந்த தீவிரவாத தாக்குதலில் இது மிகவும் பயங்கரமானது எனக் கூறப்படுகிறது.