கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் சார்பில், ஜன., 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை மூன்று நாள் மெகா உணவுத்திருவிழா. கொடிசியா வளாக ரோட்டில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் நடக்கிறது. பல்வேறு உணவகங்களின் அறுசுவை உணவு தயாரிப்பாளர்கள் இணைந்து, மண் மணக்கும் பல்வேறு உணவு பதார்த்தங்களை தயாரிக்கவுள்ளனர். சுவையோடு, இசையும் கேட்டு மகிழ, கலை நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு அரங்கம் அமைக்கப்படுகிறது.பீட்சா முதல் பிரியாணி வரை, மில்க் ஷேக், ஐஸ்கிரீம், மட்டன் சுக்கா, மீன் உணவுகள், உட்பட அனைத்து சைவ, அசைவ உணவு உண்டு மகிழலாம். விபரங்களுக்கு, 99947 -82525, 88701 -00666, 94430 -29371.
