கரோனா தொற்று நோய் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் : அமைச்சர் செ.ராஜூ

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தொற்று நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் வெளி மாவட்டத்தில் இருந்து வருகிறவர்களை தனிமைப்படுத்த, சோதனை சாவடி அருகில் உள்ள கல்லூரியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பயன்படுத்தி கொள்ளலாம். அங்கு தேவையான உணவு மற்றும் தங்கும் வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தடையின்றி உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பால கோபாலன், கூடுதல் ஆட்சியர்(வருவாய்) விஷ்ணுசந்திரன், எஸ்.பி. சண்முகநாதன், சின்னப்பன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, உதவி ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.