நாவல் பழத்தின் மருத்துவ பயன்கள்

நாவல் பழமானது பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த பழம் ஆகும். இதில் ஏராளமான சத்துக்களும் மற்றும் ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளது.பொதுவாக ஆடி மாதம் இந்த பழமானது கிடைக்கக்கூடிய ஒன்று ஆகும். தினமும் நாவல் பழம் உண்பவர்களுக்கு 30 சதவீதம் புற்றுநோய் ஏற்படுவது குறைவு என பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாவல் பழத்தில் ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. நாவல் பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும், அதிக அளவு நார்ச்சத்து, இரத்த உற்பத்தியினை அதிகரிக்கும், வைட்டமின் சி நிறைந்துள்ளது, எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கும், இரத்த சோகை நோய் வராமல் காக்கும், நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும், புற்று நோயினை தடுக்க உதவும். நீரிழிவு நோயாளிகள், நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு சிறுநீர்ப்போக்குக் குறையும். நாவல்பழச்சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.