வெட்டிவேரின் மருத்துவ பயன்கள்…

வெட்டிவேரை நாம் எல்லோரும் அறிந்த ஒரு பொருள் தான். வெட்டிவேர் ஒரு புல் இனத்தைச் சேர்ந்தது. ஆற்றுப் பகுதிகளில் நன்றாக வளரக்கூடியது. நாட்டு மருந்துவத்தில் இந்த வெட்டி வேருக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

வெட்டி வேருக்கு உஷ்ணத்தைத் தணிக்கும் சக்தியானது அதிகமாக இருக்கிறது.

  • வெயில் காலங்களில் வெட்டி வேரினை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து, அந்த விழுதினை சுடு தண்ணீரில் கலந்து குளித்தால் வெயில் காலங்களில் உடம்பில் ஏற்படும் வியர்வை, துர்நாற்றத்தை நீங்கும்.
  • கோடைகாலங்களில், வீட்டிற்கு உள்பகுதியில் வெப்பத் தன்மை அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் நம் வீட்டு ஜன்னல்களில் வெட்டிவேரை கொண்டு செய்யப்பட்ட தடுப்புகளை வைத்து வர நம் வீட்டிற்குள் இருக்கும் வெப்ப நிலை குறைந்து குளிர்ச்சி தன்மையை அடைகிறது.
  • நமக்கு காய்ச்சல் வந்த பின்பு உடலில் வலியும், சோர்வும் அதிகமாக இருக்கும். இதனை நீக்க வெட்டி வேரை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் உடல் சோர்வும் உடல், வலியும் நீங்கும். இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். வயிற்றுப்புண்ணும் குணமடையும்.
  • ஆயுர்வேதத்தில் வெட்டி வேரில் இருந்து தயாரிக்கப்படும் நறுமண எண்ணெயானது மன அமைதிக்கும், மன நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
  • நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வெட்டிவேர் டானிகிணை குடித்து வந்தால் செரிமான பிரச்சனை, சுவாசக் கோளாறு, நரம்புத்தளர்ச்சி, நீங்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கப்படுகிறது.