மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவ குணத்தை அறிவோம்!!!

மாப்பிள்ளை சம்பா ரகத்தை ஆய்வு செய்ததில் 14 க்கும் மேற்பட்ட வேதிகலவைகள் இருப்பதும், அனைத்து வேதிகலவைகளும் நோய் தீர்க்கும் அற்புதமான குணங்களை கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

வேதிக் கலவைகைளையும், அதன் குணப்படுத்தும் நோய்கள் நம் அறிவோம்.

ஹெக்சாடீகநோயிக் அமிலம், மற்றும் ஈதைல் ஈஸ்டர் ஆகிய வேதிக்கலவைகள் நோயெதிர்ப்பு சக்தி பெறவும், காயங்கள் ஆறுவதற்கு, வாத நோய்க்கு எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

ஆக்டாடீநோய்க் அமிலம், மித்தைல் ஈஸ்டர், லிநோய்க் அமிலம், ஈதைல் ஈஸ்டர் ஆகிய வேதிக்கலவைகள் புற்றுநோயை தடுக்கும் செயல்திறன் உடலில் அலர்ஜியை தடுப்பது மற்றும் இருதய நோய்களைத் தடுப்பது ஆகியவற்றிற்கு பயன்படுகிறது.

எத்தைல் ஒலிக்கேட் என்ற வேதிக் கலவை கருவுறுதலை மேம்படுத்துவது ரத்தம் உறைதலை தடுப்பது மற்றும் உடல் எதிர்ப்பு சக்தியை அளிப்பது ஆகியவற்றிற்கு பயன்படுகிறது.

நோனடீகேன் வேதிக்கலவை எதிர் உயிரியாகப் பயன்படுவது, மற்றும் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

பென்சீன் டைகார்போலைசிக் அமிலம், டைசக்டெல் ஈஸ்டர் ஆகிய வேதிக்கலவைகள் புற்றுநோயை எதிர்க்க கூடியதாக செயல்படுகிறது.

ஆக்டாடீநோய்க் அமிலம், ஈதைல் ஈஸ்டர் ஆகிய வேதிக்கலவைகள் புற்றுநோய் மற்றும் குடல் அலர்ஜி நோய்களை தடுப்பதற்கு பயன்படுகிறது.

ஆக்டர்கோசேன் என்னும் வேதிகலைவை சாதாரண ஜலதோஷம் பிடிப்பது தடுப்பதற்கு எதிர் உயிரியாக பயன்படுகிறது.

ஹேப்டாகோசேன் வேதிகலவை மஞ்சள்காமாலை குடலில் புழுக்கள் ஏற்படுத்தும் தொற்று, காயங்கள், ஆஸ்துமா, காய்ச்சல், மலேரியா, காக்காவலிப்பு, பால்வினை நோய்கள், வயிறு சம்பந்தமான நோய்களான வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் வயிற்றுவலி, போன்ற நோய்களைத் தடுக்கிறது.

இர்கொஸ்ட் வேதிகலவை ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்கவும் கருவுறுதலை அதிகப்படுத்துவது பயன்படுகிறது.

ஸ்டிக்மாஸ்டீரால் வேதிகலவை புற்றுநோயை எதிர்க்கும் கொழுப்பை குறைக்கவும் சர்மத்தை பாதுகாத்தல் மற்றும் கருவுறுதலை அதிகப்படுத்துவதற்கு பயன்படுகிறது.

சைக்ளோலநொஸ்டன் மீத்தைலின் வேதிகலவை கருவுறுதலை அதிகரிக்கும், சர்க்கரை நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது.