கிராம்பின் மருத்துவ குணங்கள்…

பிரியாணி முதல் நாம் பயன்படுத்தும் பற்பசை வரை கிராம்பு பயன்படுகிறது. இந்த தம்மா துண்டு கிராம்பில் நீங்கள் எதிர்பாராத நன்மைகள் இருக்கின்றன.

  • வயிற்று போக்கு, குமட்டல், வாந்தி, சீரணமின்மை, வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற நோய்களை சரி செய்து வயிறு, குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 
  • ஈறு அழற்சி மற்றும் பீரியண்டோன்டிடிஸ் போன்ற பாதிப்புகளை குணப்படுத்த கிராம்பு உதவுகிறது. கிராம்பு எண்ணெய்யும் பல் வலி போக்க சிறந்தது.
  • கிராம்பில் யூஜெனோல், ஃபிளாவோன்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஐசோஃப்ளேவோன்கள் சேர்ந்து இயற்கையாகவே ஹைட்ரோ-ஆல்கஹால் சாறுகளை கொடுக்கிறது.இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது . எனவே கீழ்வாதம் போன்ற ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு கிராம்பை பயன்படுத்தலாம்.
  • கிராம்பு எண்ணெய்யை தலையில் தடவுவது, பால், உப்பு போன்றவற்றில் கிராம்பு போட்டு குடிப்பதலால் தலைவலியை போக்கும்.

கல்லீரல் நோய் ஹீமோபிலியா போன்ற இரத்தப்போக்கு அல்லது இரத்த உறைதல் கோளாறு;நோயெதிப்பு சக்தி பலவீனம் அடைதல் அல்லது உணவு அழற்சி இருப்பவர்கள் இதை எடுக்க வேண்டாம். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே கிராம்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்க கூடும். அதே மாதிரி தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இதை பயன்படுத்த வேண்டாம்.