அகில இந்திய நாட்டார் பேரவை சார்பில் நெல்லையைச் சேர்ந்த சிறுமிக்கு மருத்துவ உதவி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி துவரம்பாடு கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்-சிவசங்கரி அவர்களின் 5வயது மகள் ஜெயரித்திஷாவின் கால்கள் பிறந்தது முதல் செயல்படவில்லை. பல்வேறு மருத்துவங்களை முயற்சித்தும் தகுந்த தீர்வு கிடைக்காத சமயத்தில் அந்த தகவலை அகில இந்திய நாடார் பேரவைக்கு தெரியபடுத்தினார்கள். அதை தொடர்ந்து நெல்லை வீரவநல்லூர் ஊரில் இருக்கும் மயோபதி காப்பகம் என்ற மருத்துவமனையில் இதற்கான சிகிச்சை சிறப்பாக செய்கிறார்கள் என தகவல் கிடைத்தது. 27/12/2019 அன்று அகில இந்திய நாடார் பேரவை தலைவர் சின்னத்துரை அண்ணாச்சி ,பொருப்பாளர் அர்னால்டு அரசு அண்ணாச்சி மற்றும் நிர்வாகிகள் சாத்தான்குளம் சார்லஸ் அண்ணாச்சி, சத்தியசீலன் அண்ணாச்சி மற்றும் சிங்கப்பூர் மகா கிப்ட்சன் அவர்கள், நெல்லை கனகராஜ் அவர்கள் ஆகியோர் துவரம்பாடு தம்பதியர்களை அழைத்து கொண்டு மயோபதி காப்பகத்திற்கு சென்றார்கள். மேற்படி மருத்துவர்கள் கூறியது, கண்டிப்பாக குழந்தையை மூன்று முதல் ஆறு மாதத்தில் நடக்க வைத்துவிடலாம் , இதற்காக குழந்தைக்கு ஆறுமாதம் தொடர் சிகிச்சை அளிப்பதாகவும், காலில் பொருத்தும் உபகரணத்திற்கு ஒருமுறை 14000ரூ கட்டணமும் தொடர்ந்து ஆறுமாதம் சிகிச்சைக்கு ஒவ்வொரு மாதமும் 7250ரூபாய் கட்டணமும் இருப்பதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் மருத்துவ உபகரணத்திற்கான 14000ரூ தொகையும் , முதல் மாத சிகிச்சைக்கான 7250ரூ தொகையும் சேர்த்து மொத்தம் 21250ரூ அகில இந்திய நாடார் பேரவை சார்பில் பேரவை நிர்வாகிகள் இணைந்து மயோபதி காப்பகம் மருத்துவரிடம் வழங்கினார்கள். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த மாதத்திற்கான சிகிச்சை உதவியையும் செய்து கொடுக்க அகில இந்திய நாடார் பேரவை உறுதியளித்தது . அதன்படி இன்று 23/2/2020 அந்த குழந்தையின் தகப்பனாரிடம் பிப்ரவரி மாதத்திற்கான மருத்துவ உதவி தொகையான ரூபாய் 7250 க்கான காசோலையை அகில இந்திய நாடார் பேரவையின் சார்பில் , பேரவை பொருப்பாளர் அர்னால்டு அரசு முன்னிலையில் , சென்னை வேளாங்கண்ணி கல்வி குழுமத்தின் செயலாளர் டாக்டர் .தேவ் ஆனந்த் அவர்கள் வழங்கினார்கள் .