மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழ்நாடு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் உதவி உபகரணங்களை வழங்கினார்.

சமூக பொறுப்பு நீதி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.

அருகில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு.பா.விஷ்ணுசந்திரன் இ.ஆ.ப. தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் காலோன், இ.ஆ.ப, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரமநாயகம் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.