சத்துணவு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் பணி : தூ.டி ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் சத்துணவு பணியாளர்களாக பணியாற்றி பணியிடைகாலமான சத்துணவு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கான பணி நியமன ஆணையினை வழங்கினார். அருகில் கூடுதல் ஆட்சியர் வருவாய் திரு.பா.விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு சிதம்பரம் (சத்துணவு) மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.