பிரதான் மந்திரி மாத்ரு யோஜனா மகப்பேறு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – புதுச்சேரி

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரதான் மந்திரிமாத்ருயோஜனா மகப்பேறு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத் தொடக்க விழா திருவண்டார்கோவிலில் நடைப்பெற்றது. அதனை கோபிகா எம்.எல்.ஏ., திட்டத்தை துவக்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். மற்றும் திருபுவனை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் விக்னேஸ்வரன், ஐஸ்வர்யா மகளிர் நோய்கள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். அந்த நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை குழந்தைகள் நல திட்ட அதிகாரி அமுதா, அங்கன்வாடி ஆசிரியர்கள் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.