சரியான அடி – ஈரோடு எஸ்.பி. அதிரடி!

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் ஏட்டு சுப்பிரமணியம் என்பவர் ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றி வருகிறார் சுமதி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அதற்கு சுமதி ஒரு கட்டத்தில் ”எனக்கு உன்னை பிடிக்கவில்லை என கடுமையாக கூறியிருக்கிறார். அப்போதும் விடாத ஏட்டு சுப்பிரமணி முகநூல் பக்கத்தில் சுமதியை வர்ணித்து பதிவுகள் தொடர்ந்து போட்டு வந்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீஸ் சுமதி, ஈரோடு எஸ்.பி. சக்திகணேசனிடம் ஆதாரத்துடன் புகார் மனு கொடுத்தார். இது சம்பந்தமாக துறை ரீதியாக விசாரணை நடத்த எஸ்.பி. சக்திகணேசன் ஈரோடு மகளிர் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமிக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையில் ஏட்டு சுப்பிரமணி முகநூலில் அவதூறாக பெண் போலீஸ் சுமதி பற்றி பதிவிட்டது உண்மை என தெரிய வந்தது. இதை முழுமையாக விசாரித்து அறிக்கையாக எஸ்.பி.யிடம் பெண் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்தார். இதன் பேரில் ஏட்டு சுப்பிரமணியத்தை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் ஏட்டு சுப்பிரமணியன் மீது முறையாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் ஈரோடு டவுன் போலீசார்க்கு எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.