மாஸ்க் தயாரித்து கொடுக்கும் பீனிக்ஸ் மாநகராட்சி மகளிர் சுய உதவி குழு : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சகாய மாதா பட்டனத்தில் பீனிக்ஸ் மாநகராட்சி மகளிர் சுய உதவி குழு கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்கள் முன்பு தமிழக அரசின் பாலித்தீன் பைகளை உபயோகிக்க கூடாது என்று சட்டம் ஒன்றை பிறப்பித்தது. அதனை கருத்தில் கொண்டு மக்கள் பயன்பெறும் வகையில் மக்களுக்காக துணிப்பைகள் தைத்து வழங்கி வருகிறார்கள்.

மேலும் பீனிக்ஸ் மாநகராட்சி மகளிர் சுய உதவி குழு தலைவி செல்வகனி அவர்கள் தையல் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்கள் தலைமையில் மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் திருமதி C.J. ரேவதி அவர்களின் முன்னிலையில் மகளிர் திட்டம் சமுதாய அமைப்பாளர் T. எலிசபெத் சந்திரா அவர்கள் மூலம் பீனிக்ஸ் மாநகராட்சி சுய உதவி குழு தலைவி செல்வகனி அவர்களுக்கு மாஸ்க் தைக்கு ஆர்டர் கிடைத்தது. இந்த ஆர்டர் கொடுத்த உதவிய பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்களுக்கும் மற்றும் மகளிர் குழு திட்டத்திற்கும், பீனிக்ஸ் மாநகராட்சி மகளிர் சுய உதவி குழு தலைவி செல்வகனி அவர்கள் நன்றி தெரிவித்தார்.