மார்சல் திரு. A. நேசமணி அவர்களின் 126வது பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடு விழா : தூத்துக்குடி

மார்சல் திரு. A. நேசமணி அவர்களின் 126வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு டாக்டா். சிவந்தி ஆதித்தனாா் நற்பணி மன்றம் தூத்துக்குடி ஒன்றியம், மெய்யெழுத்து அறக்கட்டளை மற்றும் நம்ம ஊரு ஆரோக்கியபுரம் மக்கள் மன்றம் சார்பில் மரம் நடு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல்துறை ஆய்வாளர் திருமதி. பிரேமா ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார்.

பின்னர் மெய்யெழுத்து அறக்கட்டளை உறுப்பினர்கள் மூலம் தாளமுத்துநகர் காவல்துறை ஆய்வாளர் திருமதி. பிரேமா ஸ்டாலின் அவர்களுக்கு மரம் வழங்கப்பட்டது. அதன்பின் காவல்துறை ஆய்வாளர் அவர்களால் மரம் நடப்பட்டது. இவ்விழாவில் மெய்யெழுத்து அறக்கட்டளை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் தொம்மை அந்தோணி மற்றும் நம்ம ஊரு ஆரோக்கியபுரம் மக்கள் மன்றம் சார்பில் ரவி, அபிநாஷ் அவர்கள் கலந்து கொண்டனர்.