திருமண உதவித்தொகை பெறும் இ- சேவை நிறுத்தம் : அதிர்ப்தியில் ஏழை மக்கள்

தமிழக அரசு சாா்பில் ஏழைகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை விண்ணப்பதாரா்களுக்கு அரசு சாா்பில் உதவித்தொகை வழங்கப்படும். தற்போது மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது திருமணம் நடைபெற உள்ளவா்கள் உதவித் தொகை பெறும் இ- சேவை மையத்துக்கு விண்ணப்பிக்க சென்றால் திருமண உதவித்தொகை பெற விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், யாரும் விண்ணப்பிக்க வர வேண்டாம் எனவும் கூறுகிறதாகவும், ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்தால் எந்த பதிவும் செய்யாமல் மனுவை வாங்கி வைத்துக் கொள்ளுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

இதுகுறித்து சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் லூா்துமணி, ஏழைகளுக்கு திருமண உதவித்தொகை கிடைக்கும் வகையில் விண்ணப்பங்களை பெற்று இணைய வழியில் பதிவேற்றம் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறுகிறார்.